பள்ளமேடு பராந்தக சுவாமிகளின்
தொகுப்பிலிருந்து.....!
1. நம் தோல்விகளுக்கு காரணம், நமது திறணற்ற சிந்தனையும், முறையற்ற செயல்முறையும் ஆகும். சுற்றமும் சூழலும் என காரணம் தேடி, தோல்வியை மறக்க முயல்கிறோம்! அங்கே களத்தில் ஒருவரை நிறுத்தி காரணம் என்கிறோம்!
2. உடன் பிணி கூட உள்ளத்தால் விளைவது தான்! முடவனும் கொம்புத்தேனுக்கு ஆசைப் படலாம்! மரம் ஏற ஒரு புதிய உத்தியைக் கைகொள்ளும் போது!
3. யாவருமே அவர்களது செயல்களை, முறையாகவும் நெறியாகவும்தான் செய்ய முயல்கிறார்கள். உங்கள் பார்வையில் தவறாகத் தெரிந்தால், அவரைக் குற்றவாளியாக்கி, உங்கள் அகந்தையை ஏற்றிக் கொள்ளாதீர்கள். அந்த அகந்தை உங்கள் அறிவைத்தான் மழுங்கச் செய்யும்!
4.எல்லோருக்கும் எல்லா திறமையும் எப்போதும் இருந்து விடாது. படைத்தவனின் பயணவிதி, களங்களைத் தீர்மாணிக்கிறது. ஒரு சிறந்த ஓவியனுக்கு, கால் ஊனமாய் இருக்கலாம். சைக்கிள் ஓட்டத் தெரியாததால் அவன் பயனற்றவன் ஆகி விட மாட்டான்.
5. இம்மண்ணில், எல்லா உயிர்களுக்காகவும் எல்லாமும் படைக்கப் பட்டுள்ளது. ஒன்றையொன்று சார்ந்து வாழ்ந்து, ஒன்றையொன்று கொன்று திண்ணும், தொடர்நிலைப் பயணத்தில், ஒருநாள் அழிதல் வேண்டும் என்பது ஆக்கிய விதி.
6. துன்பம் வரும் போது, துவளுகின்ற நாம், இன்பம் வரும்போது, யாருக்கும் நன்றி சொன்னதில்லை!
7. ஏறா மடையிலும் நீர் ஏற்றலாம், அது மீண்டும் வழியாது வகை செய்யும் போது. வாழ்க்கையும் அப்படித்தான்.
8. காற்றை யாரும் களவாட முடியாது, ஒளியை யாரும் ஒழித்து வைக்க முடியாது. அப்புறம் ஏன் இத்துனைப் போராட்டம்.
9. அழிவுக்காய், அத்துனையும் படைக்கும் அந்த ஆற்றல் மிகு, இயங்கு சக்தியின் ஆளுமையை, அறிய முடியாவிட்டாலும், உணர்ந்து கொள்ள முனைந்தால், தோல்வி என்பது நம்மைத் துரத்தாது. தீயவர் என்றொருவர் இல்லாது போவார். மனமே கலன்.
பதிப்பித்த நாள்: 18-08-2021
தன்னை யுணர்ந்தவனே உன்னை யறிவான்!
உன்னை யறிந்தவனே மண்ணை யறிவான்!
மண்ணை யறிந்த பின்னே வாழ்வு தன்னில் தெளிவான்!
தேடலும் தெளிவும் ஒற்றைப் புள்ளியில்
ஓங்காரம் இசைக்கபிறழும் ஒலியிலும் பிறக்கும் ஒளியிலும்
வாழ்வியல் தெளிய மனமே தேரும்!
- பராந்தக சுவாமிகள்!
06-10-2021
முந்தைய பகுதிக்கு..!(Click Here)
முகப்புக்கு...!(Click Here)