இன்போ. அம்பிகாவின் கவிதைகள்....!
ஏழாவது
ஈத்துலயும்
பொறந்தது
'பொட்ட'ன்னு
ஊத்துன
கள்ளிப்பாலுல
முருவம் சாவாம
கால
முழுங்கிட்டு
சாய்ச்சு
நடக்குது இத
மூக்க புடிச்சு
கொன்னுருக்கலாமுன்னு
ஊரே ஏசுச்சு
பேசுச்சு..
கரை சேர்ந்து
கைவிட்ட
வீட்டுல
கஞ்சியும் கூழும்
இல்லாத கடைசி
நாளு
அவ கருவேல முள்ளு
வெட்டி போட்ட
சோத்துல
கை வைக்கயில
நெஞ்சில
சுருக்குன்னு
தைக்குது முள்ளு
ஒன்னு..