தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
தீபத்திருநாள்
மழைக்கும் பனிக்கும் இடையில் தோன்றும்,
அழகிய மாதம் கார்த்திகை என்பதாம்!
ஒழுகிய மரபில் உவந்தே யாவரும்,
அழகியத் தீபத் திருநாள் கொள்வர்!
அழகனாம் முருகன் அவதார
நாளென்பர்!
விழுமியச் செங்கதிர் செவ்வேள் தன்னை,
அழகுடன் போற்றும் நன்நாள் இதுவே!
கெழுமிய ஈசன் சொக்கப்பனை யுண்டு!
பழகிய தீச்சுடர்ப்’பை’ போன
தெங்கே?
பழகியப் பலவழி தன்னை இழந்தோம்!
ஒழுகிய மரபை ஒதுக்கி வைத்தோம்!
வழுவாதிருங்கள் தமிழனாக, வாழ்த்துக்கள்!
கவிவளவன் 10-12-2019