தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்! 17-10-2017                  

தீபாவளி-14-11-2020
தீபாவளி 04-11-2021

தீமைகள் அகன்ற தீதறு நாளாம் இன்று!
பூமழை தூவும் புரட்டாசி கழிந்த ஐப்பசி,
மாமழை கொட்டி மருட்டும் தேய்பிறை சதுர்த்தசி,
தேமதுர தமிழர்க்கு ஒளியும் ஒலியுமாய் தீபாவளி !
அமிழ்தனைய தமிழ்மரபே ஈசனுக்கு ஏற்றும் தீபம்!
நேமமாய்க் கொண்டார் வடவர்; அமாவாசை யன்று!
நாமிடுவோம் கார்த்திகையில் சொக்கப்பனை யுடன் ஈசனுக்கே!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தீபாவளி வாழ்த்துக்கள்! - 26-10-2019

தீதறு நாளாம் இன்று,
தீமைகள் அகன்று போகும்!
பேதமை இல்லா நிலையை;
பேணிக் காத்தல் வேண்டும்!
ஆதவன் ஒளிரும் முன்னே,
அகல்களின் வெளிச்சம் ஏக,
மோதுமே ஒலியும், ஒளியும்;
முகிழுமே மகிழ்ச்சி தானே!

மின்னிடும் புத்தாடை யோடு,
தேன்சுவைப் பலகாரங்கள்!
மன்னிய கதைகள் வேண்டாம்!
மருவிலா உண்மை கொள்வோம்!
நன்னியக் குளிரை நீக்கும்,
நலமுடன் ஆடை சேர்க்கும்!
இன்னிய உறவு யாவும்,
இனிமையாய் அணைந்து கொள்ளும்!

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!                           

முந்தைய பகுதிக்குச் செல்ல...! Click Here
முகப்புக்குச் செல்ல..!
 
Click Here

அன்புடன்,
-கவிவளவன் 26-10-2019