முந்தைய பகுதிக்கு..!முகப்புக்கு...!

விடுதலை நாள் வாழ்த்துக்கள்

விடுதலைநாள் வாழ்த்து!(15-08-2017)                         

விடுதலை நாள் வாழ்த்து!

15-08-2021

புதுமை பிறந்தார் போல்,       
   
புன்னகை எழுந்தார் போல்
,
வதுவைக் கூடி யோர்
,      
   
வாழ்க்கை தொடர்ந்தார் போல்
,
இதுவோர்இன்பம்என்னும்      
   
இயன்நிலை மனதில் தேற
,
புதுப் புனல் வெள்ளம் போலே
       
   
பொங்கிடும் விடுதலை நாள்!

அடுத்ததாய் நாமும் கழித்ததோ
     
     
ஆண்டு எழுபத்தி ஐந்து!
தொடுத்த பலகளங்கள் நம்
 
     
திவ்விய அறிவைச் சொல்ல
,
வடுக்களாயும் துன்பம் சில       
     
வகுத்த நிலையும் உண்டு!

முடியாட்சி முகவரியில் தாமாய்
       
     
முகிழும் துன்பம் அவை!


தழுவும்  குளத்து நீரில்       
    
வருடும் மீன்களுண்டு!

முழுதும் இன்பம் என்க
,       
   
முதுகில் குத்து விழும்!
  
அழுகும் எண்ணங்கள் தமை
       
   
அடுத்து விரட்டி டுவோம்!

பொழுதும் விடியும் பொலிக
,       
   
விடுதலை நாள் வாழ்த்து!

புண்ணியம் கொண்ட மண்ணில் பிறந்து,
கண்ணியம் மிக்க வழியில் வளர்ந்து;
திண்ணியராக வாழ்வை நகர்த்த,
எண்ணியே நாம் இருந்தோம் இல்லை!

அரசியல் என்னும் ஆணவக் கூத்து,
இரவல் கொண்ட அன்னிய மாண்புகள்!
கரங்கோத்து, வாழ்வியல் சிதைக்க,
தரமும் கெட்டு, தன்மையும் சிதைந்து!

இன்னியோர் வாழ்வில் இனிமை கூட்ட,
நன்னிய நாளாம் இதனில் உவந்தே,
மன்னிய மரபுகள் மருவின்றி காத்து,
நன்னிலைப் பெற்று, நலமுடன் வாழ்வோம்!

15-08-2018 - விடுதலைநாள் வாழ்த்து

எழுபத்தி இரண்டாமாண்டு
இனியதாய் மலர்ந்ததின்று!
பழுதற்று துன்பம் நீங்கி,
பயனுற வாழ்தல் வேண்டி;
எழுந்திடும் எண்ணக் கூட்டில்,
இயன்நிலை பேணல் வேண்டும்!

அழுக்காறு நீங்கி வாழ்க வென்றே;
அன்புடன் *விடுதலைநாள்* வாழ்த்து!

--கவிவளவன் (12.10 AM.)

 

விடுதலைநாள் வாழ்த்து 15-08-2019
பேணிக்காக்கின்ற பெருமைகளைக் கொண்டதெங்கள் நாடு!
நாணிக் கண்புதைவர், அயலர் நம்மறிவைக் கண்டு!
மாணிக்க வீணையொலி கூட்டி,மண்பதைகள் வாழ்வார்!
மரகதப் பதுமையோ எங்கள், கலையழகின் கொற்றம்!

வீணான பழங்கதைகள் இனி வேண்டோம்!
பூணாகும் நல்வினைகள் இனி பகுப்போம்!
காணாத தீவினைகள் கண்டு வெதும்போம்!

மூளாது புனைக்கதைகள் முகவரியை மாற்ற!
கேளாத நீதியென்று, இனியேதுமில்லை!
தாளாத தோல்விதனைச் சிதைப்போம்!

தகுதியினால் பெருமைகளைக் காப்போம்!
விகுதியாகும் வாழ்வியலின் கொற்றம்!
பகுத்துண்டு ஓம்புவோம் *விடுதலைநாள் வாழ்த்து*

விடுதலை நாள் வாழ்த்து!
15-08-2022
விடுதலை என்றோர் வேள்வி நிறைந்து,
விருப்பு வெறுப்பிலா சிந்தையில் வளர்ந்து,
ஒருமனதாகி ஓர்குடியாய் வாழ்கிறோம் மகிழ்ந்து!
அருவறுப்பாய்ச் சில அசட்டுச் செயல்களில் நிறைந்து,

ஆளுவார் தாமும் செயல்படுகிறார் உவந்து!
நீளும் கரமாய் நேரிய உறவுள் அணைந்து;
தளமாம் அவரவர் மொழியும் வழியும் தவிர்த்து,
உளமதால் நிறைந்து ஒற்றுமையாய் அணைத்து,

யாவரும் இந்தியர் என்றே இணைந்து மகிழ்ந்து,
கூவிடும் சொல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை!
தாவியணைத்தே நாம்தகைவுடன் நிறைவோம்!
அவரவர் மொழியும் அவரவர் வழியும் சிறந்து,

வேற்றுமையில் ஒற்றுமை உலகுக்குச் சொல்லி,
சாற்றும் அன்பினால் சரித்திரம் படைப்போம்!
மேற்கு உலகும் நம் மேண்மையை ஆறியும்!
மாற்றமில் அன்புடன் விடுதலைநாள் வாழ்த்து!
கு.ப.அசோகன் 14-08-2022
                   வேண்டும் விடுதலை!
மன்னுபுகழ் நாட்டினிலே, மாற்றாரை  விரட்டி பெற்ற விடுதலை;
இன்னும் கூட யாவருக்கும்; இயன்நிலையில் இல்லையே!
நன்னிய செயல்களேதும் நாட்டில், புகழ்பெற வில்லையே!
கொன்று திண்ணும் புலிகூட, குவலயத்தில் நீதிதனை காக்குமே!

நன்மைதனை நானிலத்தில் நாம் பெறவே
; எழுக நீ இளைய பாரதமே!
              
என் அன்பிற்கினிய, எதிர்கால இந்தியாவை, உலக அரங்கில் செம்மையாக கோலோச்சக் காத்திருக்கும் அனைத்து இளய பாரத்திற்கும், என் நெஞ்சார்ந்த விடுதலை நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க தமிழ்!, வளர்க பாரதம்!.
 
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
- கணியன் பூங்குன்றனார்
வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழ்;
வாழிய பாரத மணித்திரு நாடு!

-
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்     14-08-2013
     15-08-2015


- கவிவளவன்  15-08-2019

 

விடுதலை நாள் வாழ்த்து! - 15-08-2020
# 73 ஆண்டுகளை எண்ணிக்
கடந்து விட்டோம்!
இன்னும் விடுதலையின்,
வேர்களில்,
வெந்நீர் குளங்கள்!

 

# நிழலும் இல்லை,
குளிரும் இல்லை!
விடுதலை அறியா;
வேந்தரும் எம்நாட்டில்!
இன்றும் உண்டு!

# அன்றாடங்காய்ச்சிகளாய்,
அடுத்து நாட்களைப்,
பசியின்றிப் பார்ப்பதே
அவர்க்கு விடுதலை!

 

இன்னொரு பக்கம்;
மதமும் மொழியும்,
அரசியல் களமாக,
ஆளுமைச் சிந்தையோடு,        
இருபுறமும்,
புரிதல் இல்லா,
ஆரவாரங்கள்!

 

# என்றும்,
ஆட்சியர் பின்னால்;
ஆளுமை செய்வது,
வணிகர் குலமே!

இன்றும், என்றும்,
உலகம் முழுமைக்கும்,
அது பொது விதி!

அவர்தம் கருத்தியலே,
ஆட்சியர் கையில்,
சட்டமா அரங்கம் ஏறும்!

 

# இன்னும்,
எம்நாட்டில்,
பலருக்கும்;
பசியினின்றும்,
விடுதலை வேண்டும்,
கல்வி பெறவும்,
வழிவகை வேண்டும்!

 

#”வண்மையில்லை ஓர்
வறுமை இன்மையால்”,

என்ற கம்பனின்;
இராமன் பிறந்த தேசமாய்;
எங்கள் இந்திய தேசம் முழுதும்,
திகழ்தல் வேண்டும்!

 

அன்றுதான்,
பிறப்பொக்கும்;
எல்லா உயிர்க்கும்!
- கவிவளவன்