பயம் அறியான் 
மண்ணில் வாழும் வாழ்க்கை
பலநாள் பலபலநாள் அன்று!

மனிதனின் வாழ்க்கையோ
சிலநாள் சிலசிலநாள் - இன்று!

ஐயோ வாழ்வை நினைத்தாலேபயம்தான்! 
பயம் நீ கொண்டால்-அது
உன்னை வெல்லும்!
பயத்தை நீ வென்றால்-அது
உன்னை சரணடையும்!

பழமையை மறந்ததால்
நமக்கு இந்தச் சோதனை!
அன்று வந்து காணாமல் போனது-இன்று! நம்மை ஆட்கொண்டுள்ளது!
வரும் காலம் நற்காலமாக,

புதுமையை மறந்து,
பழமையை நினைத்து,

வாழ்வு முறை மாற்றிப்
பயமறியா நிலை வளர,
மனிதம் தலைநிமிரட்டும்!

 கோ.ஜெயராஜ்..06-06-2021

ஜெயராஜ் கவிதைகள்...!

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்

மண்ணை முட்டிப் பயிர் பிறக்கும்
விண்ணை முட்டி மின்னல் பிறக்கும்
கருவை முட்டி உயிர்ப் பிறக்கும்
வறுமை முட்டித் துன்பம் பிறக்கும்
துன்பத்தை முட்டினால் இன்பம் பிறக்கும்

ஆண்கள் தின வாழ்த்துகள்

பல அவதாரங்களில் இவனும் ஒன்று

பல சொந்தங்களிலும் முதல் வடிவம் நீ
வீட்டில் முதல்வனும் கூட
அன்பை காட்ட தெரியாதவன் நீ
ஒருபுறம் பெற்றவர்கள்
மறுபுறம் மனைவி பிள்ளைகள்
நடுநிலையோடு கடமைதனை சில நேரம் வேதனையுடன்
பல நேரம் சாதனையுடன் தான் கலங்கினாலும்
இரு கண்ணையும் கலங்கவிடாமல் தன் ஆயுளை பாரமாக சுமந்து சரியான தருணத்தில் பகிர்ந்து குடும்பம் தலைத்தோங்க
வாழ்க்கை தலைமுறை சிறக்க
ஆணாதிக்கம் விட்டு கொடுத்து பெண்ணாதிக்கம் தலை நிமிர
தியாகங்கள் தெரியாமல் வாழும் பல "அப்பா" "வி "யின்
ஆளுமையே பெண்களின் வெற்றி 
✌️இவ்வெற்றிக்கு வழிவகுத்த அனைத்து ஆண்மகன்களுக்கும்
வாழ்த்துகள்.........

வாழ்த்துகளுடன்
கோ.ஜெயராஜ்... 19-11-2019 -
கவிதைக்களம்


சென்றதை விட்டுவிடு
வருவதை வழிகொடு
மகிழ்வை உடன் வைத்து
முயற்சிகளை தனதாக்கி

இவ்வாண்டும் இன்பம் பொங்க
புத்தாண்டு வாழ்த்துகள்

வாழ்த்துகளுடன்
கோ.ஜெயராஜ்....

01-01-2020

காய்ந்த போது வர மறுத்தாய்
காணலாய் வந்து
புயலாய் மாறி
காணும் இடமெல்லாம்
கதற விட்டாயே ஏன்?

-25-11-2018

அன்பு
அரவணைப்பு
அதிகாரம் - அம்மா

ஆசை
ஆற்றல்
ஆசான் - அப்பா

இயல்பு
இரக்கம்
இனிமை - பிள்ளைகள்

ஈரம்
ஈர்ப்பு
ஈதல் - காதல்

உறவு
உள்ளம்
உணர்வு - குடும்பம்

ஊக்கம் தரும் இந்த ஐந்தும்
வாழ்வியலின் வைரங்கள்

கோ.ஜெயராஜ்.....

05-12-2018 கவிதைக்களம்