ஆண்கள் தின வாழ்த்துக்கள்
ஆண்கள் தினம்
பெண்மையில் பிரிந்த துளி,
ஆண்மையென அறியப்பட;
ஆளுமையால் ஆட்சியுறும்!
மூளும்சீர் பெருமை யதில்,
பின்புலமாய்ப் பெண்மை யுண்டு!
தன்பலத்தை தானறியா,
பெண்குலத்தால் பேறடையும்;
ஆண்களுக்கு ஓர் வாழ்த்து!
-கவிவளவன்
19-11-2019