இல்லத்தில் இருந்திடு
பாப்பா - அதை
இன்பமாய் எண்ணிடு
பாப்பா.
பொல்லாத நுண்மிதான்
பாப்பா - நம்
புவிதனில் சுற்றுதே
பாப்பா.
மூக்கினை மூடிடு
பாப்பா - தூய
மூச்சினை இழுத்திடு
பாப்பா
நாக்கு வாயினை
பாப்பா - அதை
நன்றாக மறைத்திடு
பாப்பா.
தொட்டுப் பேசாதே
பாப்பா - கொடும்
தொற்றினைத் துரத்திடு
பாப்பா.
எட்டியே நின்றிடு
பாப்பா - நோய்
ஒட்டலைத் தடுத்திடு
பாப்பா.
கையினைக் கழுவிடு
பாப்பா - அதைக்
காலமும் கடைபிடி
பாப்பா.
மெய்தனைக் காத்திடு
பாப்பா - அதன்
மேன்மையை உணர்ந்திடு
பாப்பா .
வீதியில்
சுற்றாதே
பாப்பா - கொடும்
நோய்வந்து தாக்கிடும்
பாப்பா.
போதிய உணவினைப்
பாப்பா – நீ
பொழுதுமே உண்டிடு
பாப்பா.
பொதிகை மு.செல்வராசன்
06/06/2021
1.பொதிகை மு.செல்வராசன்