விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஓம் கணபதியே நமஹ!
ஆதிநாள் வாழ்ந்த தமிழன்,
ஆன்றநல் அறிவின் பயனாய்;
மேதினியில் பூசெய் தொடங்க,
மேண்மையுடன் கண்ட பிள்ளை;
மோதஹம் கண்டானில்லை!
ஆதது வெள்வி என்பர் தமிழர்,
அதனில் தொடக்கம் ஆக,
மாதவர் பூசும் மஞ்சள் தரும்,
மகிமையில் நின்று ஆள்வான்!
தீதன்று மண்ணில் நிறைவான்,
தெய்வ வடிவம் கொள்வான்!
யாவிலும் தொடக்கம் அவனே,
சாணியிலும் எழுவான் அவனே!
காவியம் பாடும் பாவலர்க்கு,
கனிந்தநல் ஓலைப் பதத்தை,
மேவிடும் சுழியும் கோடாய்,
மேண்மையாச் சொல்வர் அதனைப்
பிள்ளையார்ச் சுழிதான் என்றே!
ஆதியாய் நின்ற அன்னான்,
அடுத்து நிறைந்த ஆட்சிச் சூழல்,
தும்பிக்கை நாயகனைத்
சேர்க்க,
அவனுமே ஆனான் நமக்கும்,
ஆன்றநல் பிள்ளையார் ஆக!
வாதாபி பிறந்த அவனோ,
மாதவன் மருகனானான்,மருவிலா
கந்தன் தமையன்! உமையவள்
பிள்ளை என, ஊரார் மெச்ச நின்று,
ஆன்றநல் ஈசன் மகனுமானான்!
தமிழர்தம் அறிவுதன்னைத்
தடமின்றிச் சிதைத்துப் போட்டார்!
பரப்புரை கதைகள் நிறைய,
பாவமாய்த் தமிழர் அறிவே!
ஆயினும் துன்பம் இல்லை,
அனைவர்க்கும் பிள்ளையார்ச்
சதுர்த்தி நாளில் பிரியமாய்
வாழ்த்துச் சொன்னேன்!
-- கவிவளவன். 02-09-2019