நினைவின் நன்றிக்கு வாழ்த்து!
நாள்: 15-08-2023
வேளாண்குடி பிறந்த வித்தகர்
வள்ளல் கோட்டூர்
ஐயா
தாளாளர் அரங்கசாமி யின்
எண்ணத்தில்
தகைந்ததாம் கல்விச் சேவை!
மாளாப் பெருந்துயரை பலருக்கும்
மண்ணில் நீங்கிடவே வழிசெய்ய,
ஆளாக நின்று உருவாக்கியதாம்
மன்னை யிலோர் மாணவர் விடுதி!
கல்விக்கூடம் தேடி யாவரும்
கடுந்தொலைவு செல்லும் வேளை,
அல்லல் தொல்லை யின்றி
அனைவருக் கல்வி கற்க,
நல்லறமாய் தங்குமிடம் தான்செய்து,
நானிலத்தின் மக்களை ஓரிடத்தில்,
கல்விபெற பெரும்சீராய்ச் செய்து,
கருனை வள்ளலாய் நிறைந்தார்!
தமிழ்மண்ணில் பிறந்த நம்மினம்
தகைவுடனே கல்வி கற்றார்!
அமிழ்தான அந்நினைவை போற்றி,
ஆண்டுதோறும் கூடி நின்று,
தமதான நன்றி தனை செலுத்தும்,
தகைவுக்கு என்றன் வாழ்த்து!
அமைதியாய் கூடி நின்று யாவரும்,
அற்றைநாள் நினைவைப் பகிர்வரே!
அன்புடன்,
கவிஞர் கவிவளவன்.
14-08-2023 (இரவு 10-35)