மணநாள் வாழ்த்துக்கள்!
கபிலன்-இராதிகா


திருமண வாழ்த்து!(12-04-2019)
செல்வன்
ஆதித்யா செல்வி ஷ்ரேயா
வனிதையவள் கரங்கொள்ள;
வானமே வசப்படட்டும்!
இனியதாம் இல்லம் என்னும்,
இயன்நிலைதொடரட்டும்!
கனிவுசீர் அன்னையவள்;
கரங்கோத்து மகிழட்டும்!
பனிமூளும் காலை எழும்,
கதிராய் மிளிரட்டும்!
இனிவரும் காலம் இன்னிய தாகும்
நனிசீர் பெயரன் பெயர்த்தியுடன் மண்ணில்,
தனிப்பெரும் சீராய், பன்னெடுங்காலம் வாழ;
இனியனாம் கண்ணன் எந்நாளும் காப்பான்

மதுசூதனன் - விஜயலஷ்மி
(18-11-2017)
அன்பெனும் ஆற்றில் தோய்ந்து, அறிவெனும் கடலில் நீந்தி, நெறிசொலும்
நிலையினோடும், நன்னிய வாழ்வில் திளைந்து, மறுவிலா மகிழ்ச்சி பொங்க,
மதுசூதனன் காயத்திரி மாண்புடன் வாழிய நாளுமே! இனிய மணநாள் வாழ்த்துக்கள்!
மதுசூதனன் - விஜயலஷ்மி
(18-11-2019)
மதுவவன் தானே மனையறம் கண்ட மணநாள் இன்று! அதுவுமோர் வெற்றித்திருமகளின்
விருப்பமகனாய்ப்பிறந்து, வதுவைக் கூடியோர் வெற்றித் திருமகளைக் கைத்தலம்
மதியுறும்நாளாம்இதனில், மனங்கமழ் வாழ்த்து கண்டோம்!
முரளி-வாசுகி இணையருக்கு!

மணநாள் வாழ்த்து (கலியன் - மீனா)
தேமதுரத் தமிழ் போலே,
-
கவிவளவன் 02-06-2020