கலியமூர்த்தி - மீனா
கலி
23-12-2020
மணிவிழா
முரளி-வாசுகி
சதாபிஷேக விழா  வாழ்த்து!

மாமா-
கோபாலரத்தினம் - மாமி மனோன்மணி


05-09-2022
செந்தாமரை & பாபு
வெள்ளிவிழா
12-09-2022
    திலகவதி - பாஸ்கரன்
   மணிவிழா!

அறுபதாம் அகவை தன்னை;
      
அழகுடன் நிறைந்து ஏகி,
பெறுமோர் மணிவிழா இன்று!
       
பெருமைகள் சூழ்க நாளும்!
நிறைவுடன் வாழ்க வென்றே
       
  திலகவதி-பாஸ்கரன் தம்பதிக்கு,
அறம்சூழ் அன்பினோடு,
        
அளிக்கும் வாழ்த்து தானே!   
07-04-2018

மணிவிழா/சதாபிஷேக விழா வாழ்த்து!

சதாபிஷேக விழா!

ஆயிரம் பிறைகள் கண்ட;
அருந்தவக் காலம் நிறைய
பாயிரம் சாற்றும் வகையாய் 
பண்புசால் மக்கள் மூவர்! 
தீயுறு சொற்கள் இல்லா 
தீந்தமிழ் அன்பின் கேள்வன்;
சேயுறும் அன்பைக் கூட்டும்,
அக்காள் ராஜி தன்னை,
கைத்தலம் பற்றி வாழ்வின்

கனமிலாப் பெருமை கொண்ட
அத்தான் தியாகராஜன் இன்று,
காணும் இச் சதாபிஷேகம் 
மெத்தசீர் பெருமை கூட்ட 
நடனம் நனி செல்வகுமார் அமுதா
புத்திரராய் புவியில் வந்தார்!
பொலிக எந்நாளும் இறையருளால்!
09-09-2018

திரு இரவிக்குமார் - யசோதரை
மணிவிழா காணும் மாமணியே;
மருவிலாக் கீர்த்தி யடைவீரே!
அணியதாம் சீர்மகள் பெருவாழ்வு,
அடுத்ததாய்க் கொள்ள மகிழ்வீரே!
இனியதாம் இல்லறம் என்பதை,
என்றும் மனத்தில் கொள்பரே!
கனிவுடை வாழ்த்துச் சொல்வேனே!
மன்னிய உறவை உட்கலந்தே!
(05-09-2019)

 

இராதாகிருஷ்ண
திருமிகு கா.வி. ஸ்ரீனிவாச மூர்த்தி
  02-02-2026
ன் - கற்பகம்

அறுபதாம் அகவை தன்னை;

அன்புடன் அணைந்து ஏகி,
பெறுவற்கரிய பிள்ளை,
*குருபிரசாத்* அன்பினோடு;
உறும்சீர் *மணிவிழா* தன்னில்
அண்ணன் *
இராதா கிருஷ்ணன்*
அறம்கொள் நாயகி *
கற்பகம்*
இறையருளால் வாழ்க நிறைந்து!
(10-12-2018)


 

திரு ஜே.இராஜா-திருமதி லதா 05-12-2017
அகமதில் தோய்ந்த கனவை,
இகமதில் நிகழ்த்திப் பார்க்கும்;
இன்னிய வாழ்வின் தொடக்கம்!
நன்னிய நாளாம் இன்று,
அறுபதாம் அகவை கண்டீர்!
ஆன்ற சீர் பெருமை கொள்வீர்!
எல்லாம் வல்ல இறையைத்தானே;
இனியதாய் வேண்டி நிற்போம்!
05-12-2017
பாபு & பத்மா - வெள்ளிவிழா
வண்ணமாய் காலம் கனிந்து,
வந்தோர் வெள்ளி விழாவே!
திண்ணமாய் இனிமை நிறைந்து,

திகழுமே வாழ்க்கை மேலும்!
எண்ணமாய் நிறைந்த மகனும்,

எழுச்சிகொள் வாழ்வு தொடங்க,
விண்நிகர் அன்பால் நிறைந்து,

வாழ்கவென வாழ்த்துவோமே!

 (10-02-2016)

நினைவில் நெகிழ்ந்து..!
    (சித்தப்பா சித்திக்கு)

திரு K R பிரகதீசன் -   திருமதி B சகுந்தலா